ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினரும், போலீஸாரும் நேற்று தேடுல் வேட்டை நடத்தினர்.

அப்போது, பாதுகாப்பு படை யினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் அஷ்ரப் மால்வி என்பது தெரிய வந்தது. இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த தீவிரவாதிகளில் ஒருவர்.

இதுகுறித்து காஷ்மீர் ஐ.ஜி விஜய்குமார் கூறும்போது, ‘‘அமர்நாத் யாத்திரை வழித் தடத்தில் தேடுதல் வேட்டை வெற்றிகரமாக முடிந்தது’’ என்றார். அமர்நாத் யாத்திரை ஜூன் 30-ம் தேதி தொடங்கவுள்ளது. இதை தடுக்க தீவிரவாதிகள் தீட்டிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாக காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்