இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை 3,275: சிகிச்சை பெறுவோர் 19,719

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,275 புதிய கரோனா நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 19,719 ஆக குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில்கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி 189.63 கோடிக்கும் அதிகமான (1,89,63,30,362) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,34,93,473 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி 12-14 வயதிற்குட்பட்டோருக்கான 16 மார்ச் 2022 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை, ஏறத்தாழ 2.97 கோடிக்கும் அதிகமான (2,97,07,359) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
18-59 வயது உடையவர்களுக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று, அதாவது 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை (19,719) மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.05% ஆக உள்ளனர்.

இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.74 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,010 பேர். குணமடைந்துள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,47,699.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,275 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 4,23,430 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 83.93 கோடி (83,93,79,007). வாராந்திரத் தொற்று 0.78 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.77 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்