பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை மீது பாஜக மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அவர் தலைமையில் தேர்தலை சந்தித்தால் பாஜக தோல்வியை சந்திக்க நேரிடும் என கட்சி மேலிடத்துக்கு முறையிட்டனர்.
அண்மையில் பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் கூறும்போது, “தேர்தலுக்கு முன்பாக குஜராத், டெல்லி போல கர்நாடகாவிலும் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். புதுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி கிடைக்கும்” என்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூரு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கர்நாடக பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கர்நாடக பாஜக மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங் நேற்று கூறும்போது, ‘‘முதல்வர் மாற்றம் என்ற கேள்விக்கே இடமில்லை. பசவராஜ் பொம்மை எளிமையான முதல்வர் என நற்பெயர் பெற்றுள்ளார். பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களிடத்தில் கொண்டு செல்கிறார். அவர் தலைமையிலேயே பாஜக தேர்தலை சந்திக்கும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago