பெங்களூரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த திருமாவளவனுக்கு எதிர்ப்பு

By இரா.வினோத்

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த விசிக தலைவர் திருமாவளவனுக்கு தலித் அமைப்பின் நிர்வாகி ஒருவர் மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்துள்ள சர்ஜாப்பூரில் கடந்த மாதம் 24-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அம்பேத்கர் சேவா சமிதி அமைப்பின் சார்பில் நடந்த இக்கூட்டத்தில் மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ஏ.நாராயணசாமி, ஆனேக்கல் காங்கிரஸ் எம்எல்ஏ சிவண்ணா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாபா சாகேப் அம்பேத்கரின் சிலையை திறந்து வைத்து திருமாவளவன் பேசுகையில், “நாட்டின் அரசியலமைப்பை வடிவமைத்த புரட்சியாளர் அம்பேத்கரே நவீன இந்தியாவின் தேச தந்தை ஆவார். அவர் வடிவமைத்து கொடுத்ததை கொண்டே இன்றைய ஆட்சியாளர்கள் ஆட்சி செய்கிறார்கள். அந்தவகையில் அம்பேத்கர் தான் எப்போதும் ஹீரோ. அந்த காலத்தில் அவருக்கு வில்லனாக இருந்தவர் காந்தி. இந்த காலத்தில் வில்லனாக இருப்பவர் பிரதமர் மோடி” என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் விமர்சித்து பேசினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இறுதியாக நிகழ்ச்சி முடிந்து திருமாவளவன் கிளம்பும்போது மைக் அருகே சென்ற அமைச்சர் ஏ.நாராயணசாமியின் ஆதரவாளரும் தலித் அமைப்பின் நிர்வாகியுமான படாபட் சீனிவாஸ், பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக, திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்தார். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், விசிகவினரும் அதிர்ச்சி அடைந்து, அவரை அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாஜக ஆதரவாளர்கள் அதனை பகிர்ந்து, திருமாவளவனை விமர்சித்து வருகின்றனர்.

இதனிடையே கர்நாடக விசிக நிர்வாகி சேகர் சர்ஜாப்பூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், “தாமரை டிவி என்ற யூடியூப் சேனல் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியின் வீடியோவை எடிட் செய்து, திருமாவளவன் பாதியில் வெளியேறியதாக பொய் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்