வெறுப்பு அரசியல் விமர்சனம் செய்தவர்களுக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு முன்னாள் நீதிபதிகள் ஆதரவு கடிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘வெறுப்பு அரசியல்’ நடைபெறுவ தாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முன்னாள் அதிகாரிகள் குழுவினருக்கு, முன்னாள் நீதிபதிகள், முன்னாள் உயர் அதிகாரிகள் அடங்கிய மற்றொரு குழு தங்கள்கடிதம் மூலம் மறுப்பு தெரிவித் துள்ளது.

முன்னாள் அரசு உயர் அதிகாரி கள் 108 பேர் ஒன்றிணைந்து அரசியலமைப்பு நடத்தை குழு (சிசிஜி) என்ற சங்கத்தை உரு வாக்கினர். இந்த அமைப்பினர் பிரதமர் மோடிக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பினர். அதில் பாஜக ஆளும் மாநிலங்களில் வெறுப்பு அரசியல் நடைபெறுவதாகவும், அதற்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுக் கும் வகையில் 8 முன்னாள் நீதிபதிகள் 97 முன்னாள் உயர் அதிகாரிகள், 92 முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகள் சேர்ந்து ‘அக்கறையுள்ள குடிமகன்கள்’ (சிசி) என்ற பெயரில் பிரதமருக்கு ஆதரவு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில் இவர்கள் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி மீது மக்களுக்கு உள்ள திடமான நம்பிக்கையை திசை திருப்ப சிசிஜி குழு வினர் அறிவுரை கூறுவது போல், தங்கள் விரக்தியை வெளிப்படுத்தி யுள்ளனர். இவர்களின் கோபம் வெற்று அறிவுரை மட்டும் அல்ல, தவறான எண்ணங்கள், தவறான சித்தரிப்புகள் மூலம் தற்போதைய அரசுக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். உண்மையிலேயே இவர்கள்தான் வெறுப்பு அரசியலை தூண்டு கின்றனர்.

மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள்,மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடந்த வன்முறைகள் பற்றி இவர்கள் வாய் திறக்கவில்லை. பாஜக ஆட்சியின் கீழ் பெரியள விலான மதக்கலவரங்கள் குறைந்துள்ளன. இது மக்களால் பாராட்டப்படுகிறது. நாட்டில் வழக்கமாக ஆங்காங்கே நடக்கும் ஒரு சில மதக்கலவர சம்பவங்களை எந்தசமூகத்தாலும் முற்றிலும் ஒழிக்கமுடியாது. இந்த சம்பவங்களை சிசிஜி குழுவினர் பெரிதுபடுத்தி யுள்ளனர்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் டெல்லியில் நடந்த அமைதியான இந்து பண்டிகை ஊர்வலங்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக ஒரு எதிர் கதையை வளர்ப்பதே சிசிஜி குழுவினரின் உண்மையான நோக்கம்.

பிரச்சினையே இல்லாத விஷயத்தை இவர்கள் பிரச்னை யாக்குகின்றனர். இவர்கள் இரட்டை நிலைப்பாடு, சிதைந்த சிந்தனை உள்ளவர்களாக இருக்கின்றனர். சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்க, இவர்கள் மிகைப் படுத்தப்பட்ட சொற்களை பயன்படுத்த முயன்றுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், இந்து ஆதிக்கம் மற்றும் இந்து தேசியவாதம் போன்ற கதைகளை அப்படியே வைத்திருக்க விரும்புபவர்களின் செயல்கள்தான் சமீபத்தில் நடந்த ஹிஜாப், மற்றும் ஹலால்சான்றிதழ் போன்ற சர்ச்சைகள்.

இதுபோன்ற கதைகளுக்கு சிலசர்வதேச அமைப்புகளிடம் இருந்துஅங்கீகாரம் கிடைக்கின்றன. இந்தஅமைப்புகள் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்க விரும்புகின்றன. இந்த ‘அறிவு ஜீவிகள்’, இது போன்ற கதைகளை பயன்படுத்தி, இந்தியாவில் அரசியல் மற்றும் சமூக விரிசலை உருவாக்கி, நாட்டை பலவீனமாக்க முயற்சிக் கின்றனர். இவ்வாறு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய குழுவினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்