3 ஆண்டில் 14,000 வங்கதேசத்தினரை திருப்பி அனுப்பிய அரசு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எல்லை பாதுகாப்பு படை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022 ஏப்ரல் வரை,இந்தியாவில் சட்டவிரோத மாக தங்கியிருந்த வங்கதேசத் தினர், தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்ல முயன்றபோது சர்வதேச எல்லையில் 9,233 பேர் பிடிபட்டனர்.

இதே காலகட்டத்தில் வங்க தேசத்தி லிருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 4,896 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளில், இந்தியா - வங்கதேச எல்லையை கடந்த வங்கதேசத்தினர் 14,361 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்தியா, வங்கதேசத்துடன் 4,096 கி.மீ தூர எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இவற்றில் 913.32 கி.மீ தெற்கு எல்லைப் பகுதி. இவற்றில் 50 சதவீதத்துக்கும் மேல் வேலிகள் இல்லாமலும், ஆற்றங்கரை பகுதிகளாகவும் உள்ளன. இதனால் ஊடுருவலை கண்டறி வது பாதுகாப்பு படையினருக்கு சிரமமாக உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்