புதுடெல்லி: செமி கண்டக்டர் தொழிலை ஊக்குவிக்கும் அரசாக இந்த அரசு திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் ``செமிகான் - 2022’’ மாநாடு நேற்று தொடங்கியது. மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: "முந்தைய அரசானது மூடிய கதவாக செயல்பட்டது. ஆனால் இந்த அரசு தொழில்துறைக்கான கதவை திறந்துள்ளது. தொழில் துறையினர் தங்களது துறையை முன்னேற்ற கடுமையாக பாடு படும்போது, அதை ஊக்குவிக்க இந்த அரசு அதைவிட கடுமையாக பாடுபடும். அரசுடன் பேச்சு வார்த்தையை தொழில்துறையினர் எப்போதும் நடத்தலாம்.
தொழில்துறையினர் முன்னர் தங்களது பணிகளை செயல்படுத்த தயாராக இருந்தனர். ஆனால் அப்போதைய அரசு அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. தொழில் துறையை ஊக்குவிப்பதற் காகத்தான் 25 ஆயிரத்துக்கும் மேலான விதிமுறைகள் முற்றி லுமாக நீக்கப்பட்டுள்ளன. தொழில் துறையினரின் லைசென்சை புதுப்பிக்க எளிய நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
செமி கண்டக்டர் நுகர்வு அடுத்த4 ஆண்டுகளில் 8 ஆயிரம் கோடிடாலரை எட்டும் என்றும் 2030-ம்ஆண்டில் 11,000 கோடி டாலராகஉயரும் என்றும் மதிப்பிடப்பட் டுள்ளது. அடுத்தகட்ட தொழில்நுட்ப புரட்சிக்கு நாம் பாதை அமைத்து வருகிறோம். இதில் முதல்கட்டமாக 6 லட்சம் கிராமங்களை இணைய தளம் (பிராட்பேண்ட்) மூலம் இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 5-ஜி அலைக்கற்றை வசதியை உருவாக்குவதற்கான முதலீடுகளை அரசு மேற் கொண்டுள்ளது. ஒவ்வொரு தொழிலிலும் ஐஓடி எனப்படும் இணையதளம் சார்ந்த தொழில்நுட்பம் செயல்படுத்தும் விதமான வசதி உருவாக்க நட வடிக்கை எடுக்கப்படுகிறது.
உலகளவில் செமி கண்டக்டர் விநியோக சங்கிலியில் இந்தியா வும் முன்னணி நாடாக வளர தேவையான நடவடிக்கைகளை இத்துறையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், வல்லுநர்கள் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். சர்வதேச அளவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடாக இந்தியா அனைத்து வகையிலும் விளங்குகிறது. டிஜிட்டல் கட்டமைப்பு வசதியை 130 கோடி இந்தியர்களும் பெறுவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துவருகிறது. திறன் மேம்பாட்டுக்கு அரசு அதிகளவில் முன்னுரிமைஅளித்து பயிற்சி வசதியையும் இளைஞர்களுக்கு ஏற்படுத்தி யுள்ளது.
செமி கண்டக்டர் துறையில் மிகச் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்தியாவில் உள்ளனர். உலக அளவில் செமி கண்டக்டர் வடிவமைப்பு பொறியாளர்களில் 20 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர்.
இதனால் இத்துறையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. அரசும் தொழில்துறைக்கு ஆதரவான செயல்பாடுகளைக் கொண்டதாகத் திகழ்கிறது. இப்போதுதொழில்துறைக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது" இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
-பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago