முல்லைப் பெரியாறு அணையை மூடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
கேரளாவில் இடுக்கி மாவட்டத் தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை 120 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வருகிறது. அணையின் நிர்வாகத்தை தமிழக அரசு கவனித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நிபுணர்கள் குழுவைக் கொண்டு ஆய்வு செய்தது. இறுதியில், அணை பாது காப்பாக இருப்பதாக தெரிவித்த உச்சநீதிமன்றம் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளா சார்பில் தாக்கல் செய்த சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், வழக்கறிஞர் ரஸல் ஜாய் என்பவர் உச்சநீதி மன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். மனு குறித்து அவர் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலவீனமாக உள்ளது. அணை உடைந்து விபத்து ஏற் பட்டால், அணையின் கீழ் பகுதி யில் உள்ள மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படும். அணையை பலவீனமாக வைத் திருப்பது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். அணையை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் சர்வதேச நிபுணர்கள் யாரும் இடம்பெறவில்லை. அமெரிக்க கூட்டாட்சி விதிகளின்படி, சர்வதேச நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்கள் கொண்ட குழுவை அமைத்து அணையை ஆய்வு செய்து அணையை மூட வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago