திருப்பதியை அடுத்து விசாகப்பட்டினத்திலும் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அத்துமீறல்

By என்.மகேஷ்குமார்

விசாகப்பட்டினம்: திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனையில் உடல் நலம் குன்றி உயிரிழந்த ஜோஷ்வா (10) எனும் சிறுவனின் சடலத்தை அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அங்குள்ள தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ரூ.10,000 கேட்டனர். அங்கு வந்த இலவச ஆம்புலன்சையும் அவர்கள் திருப்பி அனுப்பினர். இதனால் ஜோஷ்வாவின் சடலத்தை தோளில் சுமந்தபடி 90 கி.மீ தூரம் வரை அவரது தந்தை நேற்றுமுன்தினம் கொண்டு சென்றார். இச்சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், விசாகப்பட்டினம் கேஜிஎச் அரசு மருத்துவமனையில் மனோஜ் என்பவரின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. அவர்களை தனது சொந்த காரில், மனோஜ் அழைத்து சென்றார். அப்போது, தனியார் ஆம்புலன்ஸ் கும்பல், மனோஜ் காரை மறித்து தாக்கியுள்ளனர்.

பின்னர் தாயையும், சேயையும் 5 கி.மீ. தூரத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு ஆம்புலன்ஸில் அழைத்து சென்று ரூ.5,000 வசூல் செய்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் குறித்து விசாகப்பட்டினம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்