குஜராத்தில் 250 கிலோ ஹெராயின் கடத்த முயன்ற 9 பாகிஸ்தானியர் கைது

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத்தில் இந்திய கடல் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த அல் ஹஜ் என்ற படகு ஒன்று அத்துமீறி நுழைந்தது. அரபிக் கடலில் நுழைந்த அந்த படகை கடலோர காவல் படையும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் மடக்கிப் பிடித்தனர். பாகிஸ்தான் படகில் 250 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பாகிஸ்தான் படகில் இருந்த அந்நாட்டைச் சேர்ந்த 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 9 பாகிஸ்தானியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்திவர முயன்றது தெரியவந்தது. அவர்களிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜகாவு துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருளின் சந்தை மதிப்பு ரூ.280 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் இதேபோல் குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில் கன்டெய்னர் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்