மும்பை: மகாராஷ்டிராவில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ கடந்த 2 நாட்களாக வேகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த 22-ம் தேதி இரவு பதிவாகி உள்ள அந்த வீடியோவில், சங்லி மாவட்டம் மிராஜ் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏடிஎம்மில் ஒருவர் நுழைகிறார். அவர் வெளியே வந்த சில விநாடிகளில் ஒரு ஜேசிபி இயந்திரத்தின் கிரேன் கண்ணாடி கதவுகளை உடைக்கிறது. பின்னர் அந்த கிரேன் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து இழுக்கிறது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்துள்ளனர்.
இதுகுறித்து, மிராஜ் கிராமின் காவல் நிலைய பொறுப்பாளர், இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் பெத்ரி கூறும்போது, “மர்ம நபர்கள் ஏடிஎம்மை உடைக்க பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் பெட்ரோல் பங்க் ஒன்றிலிருந்து திருடப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேநேரம் அந்த ஜேசிபி மற்றும் உடைந்த ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளோம். அந்த ஏடிஎம்மில் ரூ.27 லட்சம் இருந்தது தெரியவந்துள்ளது. பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். இதுதொடர்பாக விசாரணை நடத்த 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago