ஐஏஎஸ் அதிகாரி டீனா டாபி திருமணம்: நெட்டிசன்கள் வாழ்த்து மழை

By செய்திப்பிரிவு

ஐஏஎஸ் அதிகாரி டீனா டாபி திருமணப் புகைப்படமும், வீடியோவும் வாழ்த்து மழைகளுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2015 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் டீனா டாபி முதலிடம் பெற்றார். அதுவும் முதல் முயற்சியிலேயே முதலிடம் பெற்றார். அதுமட்டுமல்லாமல் ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்ற முதல் பட்டியலினப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார்.

முசோரியில் லால் பகதூர் சாஸ்திரி அகாடமியில் ஐஏஎஸ் பயிற்சியின் போது டீனாவுக்கும் அதே தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த அதார் அமீர் கானுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்தத் திருமணத்தை இந்தியாவே கொண்டாடியது. இருவரின் காதல் கதையும் சினிமா திரைக்கதைக்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது. அதார் கான் ஓர் இஸ்லாமியர், டீனா டாபி இந்து என்பதே இவர்கள் மீது தேசிய அளவில் கவனம் பெறக் காரணமானது. இவர்களை எத்தனை பேர் வரவேற்றுக் கொண்டாடினார்களோ அதே அளவுக்கு இவர்களது காதலுக்கும் திருமணத்துக்கும் எதிராக குரல் எழும்பியது. இந்து மகாஜன் சபா வெளிப்படையாக எதிர்ப்புகளைப் பதிவு செய்தது.

அத்தனை எதிர்ப்புக் குரல்களையும் புறந்தள்ளி இந்த ஜோடி கடந்த 2018ல் கரம் பிடித்தது. அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய அமைச்சர்கள், மக்களவையின் அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். காதலர்களின் இந்தக் கலப்புத் திருமணம் முற்போக்கு சிந்தனைவாதிகளால் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தம்பதியை வாழ்த்தினர். டீனா டாபி, அதார் அமீர் கான் திருமணம் மத வெறுப்புகளும், சகிப்பின்மையும் அதிகரித்து வரும் காலத்தில் மத நல்லிணக்கத்துக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அந்தத் திருமணம் ஓராண்டிலேயே முறிந்தது.

இந்நிலையில் டீனா டாபி, மறுமணம் செய்து கொண்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் கவாண்டேவை அவர் திருமணம் செய்து கொண்டார். பிரதீப் தற்போது, ராஜஸ்தானில் உள்ள தொல்பொருள், அருங்காட்சியகம் துறை இயக்குநராக உள்ளார். முன்னதாக கடந்த மார்ச் மாதம் டீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்தை அறிவித்தார். அதில் அவர், நீங்கள் கொடுத்த புன்னகையை நான் அணிந்து கொண்டுள்ளேன் பிரதீப் கவாண்டே எனப் பதிவிட்டு தனது காதல் திருமணம் பற்றி அறிவித்தார்.
டீனாவின் சகோதரி ரியா டாபி கடந்த 2020 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் அனைத்திந்திய அளவில் 15வது இடத்தைப் பிடித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்