வெளிநாடுவாழ் இந்தியருக்கு வாக்குரிமை - தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணைய குழு அண்மையில் தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தது. அந்த நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினரிடம் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:

புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க ஆண்டுக்கு 4 தகுதி தேதிகள், ஆதார் எண் இணைத்தல், வாக்குச் சாவடிகளில் முதியவர்களுக்கு முன்னுரிமை, கரோனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கீடு, பெண்கள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் என பல்வேறு சீர்திருத்தங்கள், புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவிபாட், மத்திய பார்வையாளர்கள் என பல்வேறு நடைமுறைகள் மூலம் தேர்தலில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. பாதுகாப்புப் படை வீரர்களுக்காக மின்னணு தபால் வாக்குரிமை திட்டம் (இடிபிபிஎஸ்) வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டிருக்கிறது. இதே திட்டத்தை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு நீட்டிப்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சுஷில் சந்திரா பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE