தூய்மை இந்தியா திட்டத்தால் காந்தியின் கனவு நனவாகும் - பாஜக மூத்த தலைவர் கவுரவ் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 2014-ம் ஆண்டில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்துக்காக 2021-2026-ம் ஆண்டுகளில் கிராமங்களுக்காக ரூ.7,192 கோடியும் நகரங்களுக்காக ரூ.1,41,678 கோடியும் செலவிடப்பட உள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 58,000 கிராமங்கள், 3,300 நகரங்கள் பயன் பெற்றுள்ளன.

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் திடக்கழிவு, நீர் கழிவு மேலாண்மை திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் வரலாற்றில் தங்க எழுத்துகளால் எழுதப்பட்ட வரலாறாக தூய்மை இந்தியா திட்டம் மாறும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு காலத்தில் இந்த திட்டத்தை எதிர்க்கட்சிகள் மோசமாக விமர்சனம் செய்தன. ஆனால் இது இப்போது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அதிதீவிர நடவடிக்கைகளால் மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா கனவு நனவாகும். இவ்வாறு பாஜக மூத்த தலைவர் கவுரவ்பாட்டியா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்