அகமதாபாத்: உலகின் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது, கோதுமை மற்றும் அரிசியின் விற்பனை கூட ரூ.8.5 லட்சம் கோடிக்கு சமமாக இல்லை என பிரதமர் மோடி கூறினார்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தியோதர் பகுதியில் புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் பனாஸ் பால் பண்ணையின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
பின்னர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பனஸ்கந்தாவில் உள்ள புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் பனாஸ் டெய்ரியின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலை ஆகியவை உள்ளூர் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. இப்பகுதி கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இது இந்தியவுக்கு உத்வேகமளிக்கிறது.
» சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்: கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
» சார்லஸ் டார்வின் 140ஆவது நினைவு நாள் - உலகைப் புரட்டிப்போட்ட எழுத்தும் வாசிப்பும்
இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது. கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாலை நம்பியே இருக்கிறது. இந்தியா ஆண்டுக்கு 8.5 லட்சம் கோடி ரூபாய்க்கு பால் உற்பத்தி செய்கிறது. கோதுமை மற்றும் அரிசி கூட இந்த அளவை எட்டவில்லை.
பால்பண்ணைத் துறையின் மிகப்பெரிய பயனாளிகள் சிறு விவசாயிகள். கிராமங்களின் பரவலாக்கப்பட்ட பொருளாதார அமைப்பு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மிகப் பெரிய பொருளாதார வல்லுநர்கள் கூட இதனை கவனத்தில் கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago