தூய்மை இந்தியா திட்டம் மூலம் நாடு புதிய அத்தியாயங்களை எழுதுகிறது - பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தின்மூலம் நாடு புதிய அத்தியாயங்களை எழுதி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுவது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

மக்கள் ஒத்துழைப்பு: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11.5 கோடி வீடுகள் மற்றும் 58,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 3,300-க்கும் மேற்பட்ட நகரங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டிருப்பதன் மூலம் அந்த இடங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

அரசின் திட்டத்தில் மக்களின் பங்கேற்பு எப்படி புதிய ஆற்றலை நிரப்ப முடியும் என்பதை தூய்மை இந்தியா திட்டம் காட்டுகிறது. கழிப்பறைகள் கட்டுவது அல்லது கழிவுகளை அகற்றுவது, வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாப்பது அல்லது தூய்மைக்கான போட்டி என எதுவாக இருந்தாலும், நாடு இன்று தூய்மை துறையில் புதிய அத்தியாயங்களை எழுதுகிறது" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்