பாலக்காட்டில் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் பயணிக்க தடை

By செய்திப்பிரிவு

பாலக்காடு: கடந்த 15-ம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பின் உள்ளூர் தலைவர் சுபைர் (43) கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாக கடந்த 16-ம் தேதி பாலக்காட்டின் மேலமுரி பகுதியில் ஆர்எஸ்எஸ் தொண்டர் சீனிவாசனை (45) மர்ம நபர்கள் கொலை செய்தனர். இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, "3 பைக்குகளில் வந்த 6 பேர் கும்பல் கொலை செய்திருப்பது சிசிடிவி கேமரா மூலம் தெரிய வந்துள்ளது. பின்னால் அமர்ந்திருந்தவர்கள் சீனிவாசனை 20 முறை அரிவாளால் வெட்டியுள்ளனர்" என்றனர்.

இதையடுத்து, பாலக்காடு கூடுதல் ஆட்சியர் மணிகண்டன் கடந்த 17-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், " பாலக்காட்டில் ஏப்ரல் 20-ம் தேதி மாலை 6 மணி வரை இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் பயணம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலக்காடு மாவட்டத்தில் வரும் 21-ம் தேதி வரை 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. இரு கொலைகள் தொடர்பாகவும் சிறப்பு புலனாய்வு குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. பிஎப்ஐ, ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த 50 பேர் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்