புதுடெல்லி: மத்திய அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழந் துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உலகளவிலான கரோனா இறப்பு எண்ணிக்கையை பகிரங்க மாக வெளியிடுவதற்கான உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச்செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். மேலும் அதில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் அலட்சியப் போக்கால் கரோனாவுக்கு 40 லட்சம் இந்தியர்கள் வரை உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி உண்மையை பேசுவ தில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்றும் பிரதமர் மோடி பொய் சொல்கிறார். அவர் தனது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்
இவ்வாறு ராகுல் கூறியுள்ளார். நாட்டில் இதுவரை கரோனாவால் 5,21,751 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
- பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago