புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் அசன்சோல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. இந்த தொகுதியை பாஜகவிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கைபற்றுகிறது. இதுபோலவே பிஹாரில் ஆர்ஜேடியும் சத்தீஸ்கரில் காங்கிரஸும் முன்னிலை வகித்து வருகின்றன.
மேற்குவங்க மாநிலம் அசன்சோல் மற்றும் மேற்கு வங்க மாநிலம் பாலிகங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பிஹாரின் போச்சான், மகாராஷ்டிரத்தின் கோலாப்பூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற்றது.
அசன்சோல் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த பாபுல் சுப்ரியோ பதவியை ராஜிநாமா செய்து கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். பிறகு, பாலிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். காங்கிரஸிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்த நடிகர் சத்ருகன் சின்ஹா அக்கட்சி சார்பில் அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
» IPL 2022 | டெல்லி அணியில் ஒருவருக்கு கரோனா; பெங்களூரு உடனான போட்டி திட்டமிட்டபடி நடைபெற வாய்ப்பு
அசன்சோல் தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா பாஜக வேட்பாளரைவிட 34,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
பாலிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் பாபுல் சுப்ரியோ 23,501 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.சத்தீஸ்கரில் கைராகர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் 25,854 வாக்குகள் முன்னிலையிலும், பாஜக 16,968 வாக்குகள் முன்னிலையிலும் உள்ளது.
பிஹார் மாநிலம் போச்சான் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளர் அமர் குமார் பாஸ்வான், பாஜகவின் பேபி குமாரியை விட 11,620 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago