யேசு கிறிஸ்துவின் லட்சியங்கள் மக்களுக்கு வழிகாட்டும் ஒளி - புனித வெள்ளி நாளில் பிரதமர் ட்வீட்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: புனித வெள்ளி நாளான நேற்று யேசு கிறிஸ்துவின் துணிச்சல் மற்றும் தியாகங்களை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நாளில் யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்றனர். இது அவர்களுக்கு துக்கம் மற்றும் தவம் செய்யும் நாளாகும்.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று ட்விட்டர் பதிவில், “புனித வெள்ளியன்று யேசு கிறிஸ்துவின் தைரியம் மற்றும் தியாகங்களை நாங்கள் நினைவுகூர்கிறோம். அவருடைய லட்சியங்களான சேவையும் சகோதரத்துவமும் பல மக்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

கேரள மக்களுக்கு வாழ்த்து

கேரள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “விஷு பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வசித்து வரும் மலையாளிகளுக்கு எனது வாழ்த்துகள். இந்த ஆண்டு உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் நிறைந்த ஆண்டாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதுபோல் நேற்று புத்தாண்டை கொண்டாடிய மேற்கு வங்க மாநில மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE