அருணாச்சலில் 5.3 ரிக்டர் நிலநடுக்கம்

By செய்திப்பிரிவு

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் நேற்று 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அருணாச்சல பிரதேசத்தின் பான்கின் பகுதிக்கு வடக்கே 1,176 கி.மீ. தொலைவில் வெள்ளிக்கிழமை காலை 6.56 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியில் 30 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவாகியது” என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிருக்கோ அல்லது உடைமைகளுக்கோ சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

ஒடிசாவிலும் நிலநடுக்கம்: ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தின் தாஸ்பல்லா பகுதியில் நேற்று 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக, சிறப்பு நிவாரணப் பணி ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “ஒடிசாவில் வெள்ளிக்கிழமை காலை 11.19 மணிக்கு 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் மையம் கஞ்சம் மாவட்டத்தில் 10 கி.மீ. ஆழத்தில் இருந்தது” என கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக எவ்வித தகவலும் இல்லை என மாவட்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE