புதுடெல்லி: அமெரிக்காவில் முகாமிட்டுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சான்பிரான்சிஸ்கோ நகரில் இந்திய வம்சாவழியினர் மத்தியில் நேற்று பேசினார். அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமை, கவுரவம் உயர்ந்து கொண்டே செல்கிறது. உலகின் மிகப்பெரிய 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக முன்னேறி செல்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த கனவு சாத்தியாகும். இதை யாராலும் தடுக்க முடியாது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களின் வீர, தீரத்தை உலகமே பாராட்டியது. இந்தியா மீது தாக்குதல் நடத்தினால், யாரும் தப்பிக்க முடியாது, யாரையும் விட்டுவைக்க மாட்டோம். இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
சீனா, பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago