கர்நாடகாவில் ஒப்பந்ததாரர் தற்கொலை: ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப் பதிவு

By இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் (40). இவர், அரசு திட்டங்களின் ஒப்பந்ததாரராகவும் இருந்தார். பாஜக உறுப்பினரான இவர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தன்னிடம் அரசின் ஒப்பந்த பணி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க 40 சதவீத கமிஷன் கேட்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

அவர் மீது ஈஸ்வரப்பா அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில், சந்தோஷ் பாட்டீல் நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், சந்தோஷ் பாட்டீலின் சகோதரர் பிரஷாந்த் அளித்த புகாரின்படி, ஈஸ்வரப்பா, அவரது உதவியாளர்கள் ரமேஷ், பசவராஜ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே ஈஸ் வரப்பாவை பதவியில் இருந்து நீக்க கோரி காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் நேற்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் கடிதம் கொடுத்தனர். தன் மீதான குற்றச்சாட்டை ஈஸ்வரப்பா மறுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்