அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் பரூச் மாவட்டம், தாஹேட் என்ற இடத்தில் உள்ள தொழிற்பேட்டையில் ஓம் ஆர்கானிக்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அகமதாபாத்தில் இருந்து 235 கி.மீ. தொலைவில் இந்த ஆலை உள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த தொழிற்சாலையில் கரைப்பான் வடிகட்டுதல் செயல்முறையின் போது உலை வெடித்தது. இதில் தொழிற்சாலை தீப்பற்றி எரிந்தது. தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லீனா பாட்டீல் கூறும்போது, “உலை வெடித்ததில் தொழிற்சாலை தீப்பற்றி எரிந்தது. இதில் உலைக்கு அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 6 தொழிலாளர்களும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பின்னர் மீட்கப்பட்டு, பிரதேசப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வெடிவிபத்தில் வேறு எவருக்கும் பாதிப்பு இல்லை” என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago