திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ. 300 சிறப்பு தரிசன மையத்தில் நேற்று தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பக்தர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கு புத்தாண்டு, இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை வந்ததால், தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பெற்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை ஏடிசி அருகே புதிதாக கட்டப்பட்ட மையத்தில் தங்களது உடைமைகளை வைத்து விட்டு தரிசனத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது உடைமைகளை ஸ்கேன் செய்யும் இயந்திரம் பழுதானது. இதனால் பக்தர்கள் உரிய நேரத்தில் தரிசனத்துக்கு செல்ல முடியாமல் அவதி பட்டனர். பக்தர்களின் கூட்டமும் அதிகரித்தது. இதன் காரணமாக பக்தர்களுக்கும் திருமலை, திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு பக்தர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பக்தர்களை சமாதானப்படுத்தினர்.
பின்னர் ஸ்கேனர் பழுது பார்க்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago