புதுடெல்லி: தனியார் மருத்துவமனைகளுக்கான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி விலை ரூ.225 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மையங்களில் பணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதன்படி 2-வது டோஸ் செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். இந்தப் பணியானது நாளை முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தனியார் மருத்துமனைகளுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலையை ரூ.225 ஆக குறைத்து சீரம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மத்திய அரசுடன் நடத்திய ஆலோசனையின்படி தனியார் மருத்துமனைகளுக்கான தடுப்பூசியின் விலை ரூ.600-ல் இருந்து ரூ.225 ஆக குறைக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதைபோன்று பாரத் பயோ டெக் நிறுவனமும் கோவாக்சின் தடுப்பூசியின் விலையை ரூ.225 ஆக குறைந்துள்ளது. எனவே, நாளை முதல் தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ரூ.225 கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Announcing #CovaxinPricing .
We welcome the decision to make available precautionary dose for all adults. In consultation with the Central Government, we have decided to revise the price of #COVAXIN from Rs 1200 to Rs 225 per dose, for #privatehospitals.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago