கேரளாவில் Post-wedding ஷூட்டின்போது ஆற்றில் மூழ்கி மணமகன் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கேரளா: கேரளாவில் திருமணத்திற்குப் பிந்தைய போட்டோஷுட் படப்பிடிப்பில் (Post-wedding shoot) நடந்த விபரீதத்தில் மாப்பிள்ளை உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pre wedding - Post-wedding தற்போதுள்ள இளம் தலைமுறைகளிடத்தில் டிரெண்டிங்கில் உள்ள வார்த்தை. எவ்வளவு செலவழித்தாலும் இம்மாதிரியான புகைப்படங்களை எடுத்து விடுவதை தங்களது கவுரவமாகவே பலரும் கருதுகின்றனர். இப்புகைப்படங்களுக்காக ஆழ்கடல், ஆறு, மலை, விமானங்கள், நெருப்பு என எதையும் அவர்கள் விடுவதில்லை. இந்த நிலையில், கேரளாவில் Post-wedding நிகழ்வில் மாப்பிள்ளை உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர்கள் ராஜின், கனிகா புதுமனத் தம்பதியினர். இவர்களுக்கு கடந்த மார்ச் 14-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், Post-wedding நிகழ்வுக்காக, புகைப்படம் எடுப்பதற்கு கோழிக்கோடு பகுதியில் உள்ள குட்டியாடி ஆற்றில் இருவரும் தவறி விழுந்துள்ளனர். இதில், கனிகாவை உள்ளூர்வாசிகள் காப்பாற்றிட, ராஜின் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கனிகா தொடர்ந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுமணத் தம்பதிகளுக்கு நடந்த இந்த துயரமான நிகழ்வு, கேரள மக்களை சோகமடையச் செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்