புதுடெல்லி: இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (சிஎம்ஐஇ) வெளியிட்டுள்ள தகவல்கள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசுவெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேலை வாய்ப்பின்மை சதவீதம் அதிகமாகவுள்ளது. இதில் சத்தீஸ்கர் மாநிலம் குறைந்தபட்ச வேலைவாய்ப்பின்மை உள்ள மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அந்த மாநிலத்தில் 7.6 சதவீத வேலைவாய்ப்பின்மை மட்டுமே நிலவுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் அந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் 0.6 ஆகஉள்ளது. அந்த மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த புதிய கொள்கைகளை அமல்படுத்தி உள்ளதால் வேலைவாய்ப்பின்மை சதவீதம் குறைந்துவருகிறது. அதேநேரத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளமாநிலங்கள் பட்டியலில் ஹரியாணா முதலிடம் வகிக்கிறது. அந்த மாநிலத்தில் 26.7 சதவீத வேலைவாய்ப்பின்மை உள்ளது.
இந்தப் பட்டியலில் 2-வது இடத்தில் ராஜஸ்தானும், ஜம்மு-காஷ்மீரும் (25 சதவீதம்), 3-வது இடத்தில் ஜார்க்கண்டும் (14.5 சதவீதம்) உள்ளன.
சத்தீஸ்கரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுராஜி காவோன் யோஜனா, நர்வா-கர்வா-குர்வா-பரி திட்டம், கோதன் நியாய் யோஜனா, ராஜீவ் காந்தி கிஸான் நியாய் யோஜனா திட்டங்களை அறிவித்து அதைசெயல்படுத்தியதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகமாக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
- பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago