பஞ்சாப் சட்டப்பேரவை தீர்மானம்: சண்டிகரை பஞ்சாபுக்கு மாற்ற பகவந்த் மான் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாப், ஹரியாணா ஆகிய இரு மாநிலங்களுக்கும் தலைநகரமாக இருக்கும் சண்டிகர் யூனியன் பிரதேசமாக உள்ளது. அரசு ஊழியர்கள் பஞ்சாப் அரசு சேவை விதிகளின்கீழ் செயல்படுகின்றனர்.

ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சண்டிகர் யூனியன் பிரதேசம் என்பதால் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு சேவை விதிகள் பயன் பாட்டுக்கு வரும் என்று அறிவித்தார். இது மாநில உரிமையை பறிக்கும் செயல் என்று முதல்வர் பகவந்த் மான் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், சண்டிகரை பஞ்சாபுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் பகவந்த் மான் நேற்று தீர்மானம் கொண்டு வந்தார்.

அந்த தீர்மானத்தில், ‘‘மாநிலங் களுக்கிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும், மக்களின் உணர் வுகளை மதிக்கும் வகையிலும், சண்டிகரை உடனடியாக பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது எல்லாம், தலைநகரம் தாய் மாநிலத்திலேயே இருக்கும்.

எனவே, சண்டிகரை முழு மையாகப் பஞ்சாபிற்கு மாற்ற வேண்டும். மத்திய அரசு சண்டிகர் நிர்வாகத்தின் ஊழியர்களுக்கு மத்திய சிவில் சேவை விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடந்த கால புரிந்துணர்வுக்கு முற்றிலும் எதிரானது’’ என்று கூறப்பட்டுள்ளது. பின்னர், இந்தத்தீர்மானம் பேரவையில் நிறைவேற் றப்பட்டது.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்