திருமலை: திருப்பதி அறங்காவலர் குழுவில் இடம்பெற, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பிரமுகர்கள் போட்டி போடுகின்றனர். இதனால் தற்போது ஜெகன்மோகன் அரசு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என இரு பிரிவுகளாக பிரித்து நியமனம் செய்தது.
இதில் 52 சிறப்பு அழைப்பாளர்களில் பலர் குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்பதால் இவர்கள் பெருமாளுக்கு சேவை செய்ய தகுதியற்றவர்கள் என இந்து ஜனசக்தி நல அமைப்பின் நிறுவனர் லலித்குமார், அனந்தபூர் மாவட்டம், கல்யாண துர்கா பகுதியை சேர்ந்தஉமா மகேஷ்வர் நாயுடு மற்றும்
ஆந்திர மாநில பாஜக அதிகாரபிரதி நிதியும் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினருமான பானு பிரகாஷ் ஆகிய மூவரும்தனித்தனியாக உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனால், 52 பேர் இதுவரை பதவி பிரமாணம் ஏற்கவில்லை. இவ்வழக்கை கடந்த வியாழக் கிழமை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமார் மிஸ்ராமற்றும் நீதிபதி சத்யநாராயண மூர்த்தி ஆகியோர் விசாரணைநடத்தினர். அப்போது அரசு சார்பில்வழக்கறிஞர் சிவாஜி வாதாடுகையில், அரசு 52 சிறப்பு அழைப்பினர் விஷயத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
பின்னர், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆஜரானவழக்கறிஞர் எஸ்.எஸ்.பிரசாத்,“அரசின் புதிய சட்ட திருத்தமசோதாவை நீதிமன்றம் ஏற்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இது ஆளுநரின் ஒப்புதலுக் குபிறகு பரிசீலிக்கப்படும் எனகூறப்பட்டது. அரசுத் தரப்பு வழக்கறிஞர், “52 பேர் நியமனத்தில்குற்றப் பின்னணி உள்ளவர்கள்யாரும் இல்லை. இது வேண்டுமென்றே புனையப்பட்ட வழக்கு” என வாதாடினார்.
இதற்கு, “எங்களுக்கு யார் யாருக்கு குற்றப் பின்னணி உள்ளது என்பது நன்கு தெரியும். திருமலை திருப்பதி தேவஸ்தானம் போன்று மிகப்பெரிய அறங்காவலர் குழுவில் குற்றவாளிகள் யாரும் உறுப்பினர்கள் ஆககூடாது.அதனை அனுமதிக்கவும் முடியாது.இது பல கோடி பக்தர்களுக்குதொடர்புடைய விஷயம் கவனமாக இருத்தல் அவசியம்” எனநீதிபதிகள் எச்சரித்தனர். பின்னர்,இவ்வழக்கு வரும் 19 ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இதுதொடர்பாக நேற்றுதேவஸ்தானஅறங்காவலர்குழு தலைவர் சுப்பாரெட்டி கூறுகையில், “குற்றப் பின் னணி இருப்பவர்கள் கண்டிப்பாக அறங்காவலர் குழுவில் இருந்து நீக்கப்படுவர்” என கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
40 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
21 hours ago