மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி உயர்த்தும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு முன் தேதியிட்டு 2022 ஜனவரி 01 முதல் வழங்கப்பட இருக்கிறது. இந்த உயர்வு 7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரைகள் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் அரசுக்கு ஆண்டு தோறும் கூடுதலாக ரூ.9,544.50 கோடி செலவாகும். இதனால் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE