புதுடெல்லி: உத்தர பிரதேச தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்ததால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் இளைஞருக்கு முதல்வர் யோகிஆதித்யநாத் அஞ்சலி செலுத்தினார்.
உ.பி.யில் நேபாள எல்லையில் உள்ள குஷிநகர் மாவட்டத்தின் காத்கரி கிராமத்தை சேர்ந்தவர் பாபர் (30). பாஜக ஆதரவாளரான இவர் உ.பி. தேர்தலுக்குப் பின், பாஜக வெற்றியை இனிப்பு வழங்கிகொண்டாடியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல்20-ம் தேதி அவரை கடுமையாகதாக்கியது. இதில் பலத்த காயமடைந்த பாபர், சிகிச்சை பலனின்றி லக்னோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ராம்கோலா காவல்நிலையத்தில் பாபரின் மனைவி புகார் அளித்தார். அவர் தனது புகாரில், “எனதுகணவர் உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அந்த கட்சிக்கே தனது வாக்கையும் அளித்தார். இந்த கோபத்தில் எனது கணவரின் உறவினர்கள் 4 பேர் அவரை அடித்தே கொன்று விட்டனர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
உறவினர்கள் நால்வரின் பெயரையும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் ராம்கோலா போலீஸார் சுணக்கம் காட்டி வந்தனர். இதனால், நேற்று குஷிநகருக்கு வந்த பாபரின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யாமல் அவரது மனைவி போராட்டத்தில் இறங்கினர்.
இதனால் அப்பகுதி பாஜக எம்எல்ஏ பி.என்.பாதர்கும் மாவட்ட துணை ஆட்சியர் டி.கே.சிங்கும் நேரில் வந்தனர். இதையடுத்து பாபரின் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த தகவல் உ.பி. முதல்வர் யோகிக்கும் அளிக்கப்பட்டு அவரதுஅலுவலகம் சார்பில் ட்விட்டர் பக்கத்தில் பாபருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் “குஷிநகரின் காத்கரி கிராமத்தின் பாபர்ஜியின் மறைவுக்கு முதல்வர் யோகி தனதுஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இவரை அடித்துக் கொன்றவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து தமது அலுவலகத்துக்கு அறிக்கைஅளிக்கும்படியும் காவல்துறையினருக்கு முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
49 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago