பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு பணியின் போது ஹிஜாப் அணிந்திருந்ததாக பார் வையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு பிறகு, நேற்று எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. எட்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நேற்று ஷிமோகாவில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுந்த வந்த முஸ்லிம் மாணவிகளை, ஹிஜாபை அகற்றுமாறு பள்ளி நிர்வாகம் வலியு றுத்தியது. இதனை ஏற்று பெரும் பாலான மாணவிகள் ஹிஜாபை அகற்றிய நிலையில் 8 மாணவிகள் தேர்வை புறக்கணித்து விட்டு வீடுகளுக்கு திரும்பினர். இதே போல பாகல்கோட்டை, பீஜாப்பூர், சிக்கமகளூரு, கோலார், உடுப்பிஉள்ளிட்ட இடங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் ஹிஜாப்அணிய அனுமதி மறுத்ததால் எஸ்எஸ்எல்சி தேர்வை புறக்கணித்தனர்.
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கே.எஸ்.டி.வி. உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை நூர் பாத்திமா எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு பார்வையாளராக நியமிக்கப் பட்டிருந்தார். அவர் தேர்வுஅறையில் ஹிஜாப் அணிந்திருந்ததை அறிந்த கல்வித் துறை அதிகாரி ஹிஜாபை அகற்றிவிட்டு பணியில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார்.
அதனை ஏற்க மறுத்த நூர் பாத்திமா, ‘‘கர்நாடக கல்வித் துறை மாணவிகளுக்கு மட்டுமே ஹிஜாப் அணிய கூடாது என உத்தரவிட்டுள்ளது. எனது ஹிஜாபை அகற்ற முடியாது'' என வாதிட்டார். இதனால் நூர் பாத்திமா தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில், அவர் ஹிஜாப் அணிந்ததற்காக பணி இடை நீக்கம் செய்வதாக கல்வித்துறை ஆணை பிறப் பித்தது. இந்த சம்பவத்துக்கு முஸ்லிம் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago