பாட்னா: பிஹாரின் பாட்னா மாவட்டத்தில் பக்தியார்பூர் நகர் அமைந்துள்ளது. இது, மாநில முதல்வர் நிதிஷ் குமாரின் சொந்த ஊராகும். அந்த நகரில் சுதந்திர போராட்ட தலைவர் ஷில்பத்ரா யாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அவரின் சிலைக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மர்ம நபர் ஒருவர் வேகமாக மேடையேறி முதல்வர் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். அங்கிருந்த போலீஸார், மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் உள்ளூரை சேர்ந்த நகைக் கடை வியாபாரி சங்கர் (25) என்பது தெரியவந்துள்ளது. முதல்வர் மீது எதற்காக அவர் தாக்குதல் நடத்தினார் என்பது தெரியவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திடீர் தாக்குதலில் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பெரிதாக பாதிப்பு இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago