கோவா முதல்வராக இன்று பிரமோத் சாவந்த் பதவியேற்பு

By செய்திப்பிரிவு

பனாஜி: கோவாவின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் பாஜக 20 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 11, சுயேச்சைகள் 3, ஆம் ஆத்மி 2, மகாராஷ்டிரவாதி கோமந்தக் 2, கோவா பார்வர்டு 1, புரட்சிகர கோன்ஸ் கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க 21 எம்எல்ஏக் களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏவின் ஆதரவு தேவைப் பட்டது. இந்த சூழலில் 3 சுயேச் சைகள், 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தற் போதைய முதல்வர் பிரமோத் சாவந்த், மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினம் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையை சந்தித்த சாவந்த் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் 25 எம்எல்ஏக்களின் பட்டியலையும் அளித்தார். இந்நிலையில், கோவா தலைநகர் பனாஜியில் அமைந்துள்ள ஷியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். விழாவில் சுமார் 10,000 பேர் பங்கேற்க இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பிரமோத் சாவந்துடன் பதவி யேற்கும் அமைச்சர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்