சத்தீஸ்கரில் அரசு மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி வழங்காததால் மகளின் சடலத்தை 10 கி.மீ. தோளில் சுமந்து சென்ற தந்தை

By செய்திப்பிரிவு

சத்தீஸ்கரில் அமரர் ஊர்தி வசதி செய்து தரப்படாததால் 7 வயது மகளின் சடலத்தை அவரது தந்தை10 கி.மீ. தொலைவுக்கு தோளில் சுமந்து சென்றுள்ளார்.

சத்தீஸ்கரின் சர்குஜா மாவட்டம், லகன்பூர் வட்டம், அம்டாலா கிராமத்தைச் சேர்ந்த ஏழை தொழிலாளிஈஸ்வர் தாஸ். அவர் கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட தனது மகளைலகன்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். மகளின் சடலத்தை வீட்டுக்குஎடுத்துச் செல்ல அமரர் ஊர்தி வசதிசெய்து தருமாறு அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் ஈஸ்வர்தாஸ் முறையிட்டார். ஆனால் மருத்துவமனை அலுவலர்கள் அலட்சியமாக இருந்ததால் மகளின் சடலத்தை தோளில் சுமந்தபடி 10 கி.மீ. தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு நடந்தே சென்றார்.

செல்லும் வழியில் மனிதாபிமானமிக்க சிலர், அவரிடம் விசாரித்தனர். தனக்கு நேர்ந்த கொடுமையை ஈஸ்வர்தாஸ் அவர்களிடம் விவரித்தார். இதை வீடியோவாக பதிவு செய்த அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ அதிவேகமாக பரவியதால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

ஈஸ்வர்தாஸ் வசிக்கும் அம்டாலா கிராமம் அம்பிகாபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள் அமைந்துள்ளது. இந்த தொகுதி எம்எல்ஏ சிங் டியோ மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார். அமைச்சரின் சொந்த தொகுதியில் ஏழை தொழிலாளிக்கு நேர்ந்த கொடுமை சத்தீஸ்கர் மட்டுமன்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர் பி.எஸ்.கெரகட்டா தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்