கர்நாடக மாநில பள்ளிகளில் சரஸ்வதி சிலைகள் உடைப்பு: போலீஸார் தீவிர விசாரணை

By இரா.வினோத்

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள ஹரோ ஹள்ளி அரசு ஆரம்ப பள்ளியில் வைக்கப்பட்டிருந்த சரஸ்வதி, விவேகானந்தர் மற்றும் காந்தியின் சிலை கடந்த வாரத்தில் சேதப்படுத்தப்பட்டது.

இதைக் கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, போலீ ஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் பெலகாவி மாவட்டம் சிக்கோடி அருகேயுள்ள சிஞ்சனி அரசுப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த சர‌ஸ்வதி சிலைநேற்று முன்தினம் உடைக்கப்பட்டது. மேலும் பள்ளியின் பெயர்ப் பலகை, நிழற்குடை ஆகியவையும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சிக்கோடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துதீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அங்கு பஜ்ரங் தளம் அமைப்பினர் சரஸ்வதி சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

இந்நிலையில் போலீஸார் நேற்று சம்பவ இடத்தில் ஆய்வுசெய்தனர். கண்காணிப்பு கேமராபதிவுகளை சேகரித்து, குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக பள்ளிகளில் முஸ்லிம்மாணவிகள் ஹிஜாப் அணிவதற்குவிதிக்கப்பட்ட தடையை எதிர்த்துநடந்த போராட்டத்துக்கு பிறகு கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் மத ரீதியான மோதல்கள் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ள‌து.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்