ஆயுஷ்மான் திட்டத்துக்கு ரூ.37,185 கோடி அனுமதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ்மருத்துவமனையில் சேருவோருக்கு இதுவரை ரூ.37,185 கோடிஅனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது:

மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்காகவும் அவர்கள் குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை பெறவும் ஆயுஷ்மான் பாரத்- பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டம் கடந்த 2018-ம்ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. கடந்த மார்ச் 21-ம் தேதிவரை இத்திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் சேருவோருக்கு இதுவரை ரூ.37,185 கோடிஅனுமதிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகள் சொந்தமாகசெலவு செய்தால் 1.5 மடங்கு முதல் இரண்டு மடங்கு வரை கூடுதல் செலவை செய்ய வேண்டியிருக்கும். இந்த திட்டத்தின் மூலம் சிகிச்சைக்காக மக்களின் அதிக செலவு குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் நோக்கில் ஆயுஷ்மான் பாரத் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய திட்ட மாக பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE