போர்ட்பிளேர்: இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணை களை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைகளை நீர்மூழ்கி கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், நிலத்தில் இருந்து ஏவ முடியும்.
உலகின் அதிவேக சூப்பர் சானிக் ஏவுகணையாக பிரம்மோஸ் உள்ளது. இது ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக் கூடியது. பிரம்மோஸ் ஏவுகணைகளின் வேகம், சீறிப் பாயும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தரையில் இருந்து தரை இலக்கை தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை நேற்று முன்தினம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
அந்தமான், நிகோபர் தலைநகர் போர்ட்பிளேரில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது என்று அந்த படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இதற்காக டிஆர்டிஓ குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். பிரம்மோஸ் ஏவுகணை சீறிப்பாய்ந்த வீடியோ வையும் அவர் ட்விட்டரில் வெளி யிட்டுள்ளார்.
- பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
39 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago