கலப்பட மருந்து புகார்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By ஏஎன்ஐ

ரான்பாக்ஸி மருந்து நிறுவனத்துக்கு எதிரான கலப்பட புகார்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரான்பாக்ஸி நிறுவனத்துக்கு எதிராக எம்.எல்.சர்மா என்ற வழக் கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “அமெரிக்காவில் கலப்பட மருந்துகள் விற்பனை செய்ததாக ரான்பாக்ஸி நிறுவனத் துக்கு அந்நாட்டு அரசு 50 கோடி டாலர் (சுமார் ரூ.3,312 கோடி) அபராதம் விதித்துள்ளது. எனவே இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள இந்த நிறுவனத் துக்கு சொந்தமான மருந்து உற் பத்திக் கூடங்களை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும். இந்தியா வில் கலப்பட மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண் டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு ரான்பாக்ஸி நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராக்பாக்ஸி நிறுவனம் மீதான கலப்பட புகார் குறித்து விசாரிக்கவும், விளக்கம் அளிக்கவும் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்