உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதிக்க கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நகருந்தரி - துர்கி - அம்பகோரியா சாலை திட்டம் தொடர்பான ஒப்பந்தம் முறையாக நடைபெறவில்லை என்பதைக் காரணம் காட்டி, மீண்டும் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளச் சொல்லி அந்தத் திட்டம் மீது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், அந்தச் சாலைப் பணி தடைபட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் ராமசுப்ரமணியன் அடங்கிய அமர்வு, ‘‘பொதுத் துறை தொடர்பான உள்கட்டமைப்புத் திட்டங்கள் மீது உயர்நீதிமன்றங்கள் தடைவிதிக்கக் கூடாது. அந்தப் ஒப்பந்தங்கள் முறையாக நடக்க வில்லை என்றாலும்கூட, அவற்றின் மீது தடை விதிக்க வேண்டாம்.

மாறாக, ஒப்பந்தத்தை இழந்தவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்து இழப்பீடு கோரட்டும். உள்கட்டமைப்பு திட்டங்கள் மீது தடை விதிப்பதால் மக்களுக்கும் அரசுக்கும்தான் நஷ்டம் ஏற்படுகிறது. மக்களின் வரிப் பணத்தைக் கொண்டுதான் உள்கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நீதிமன்றங்களின் தடையினால் அத்திட்டங்களை செயல் படுத்துவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் வரியும் செலுத்திவிட்டு, அதற்கான பலனையும் அனுபவிக்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின் றனர். உள்கட்டமைப்புத் திட்டங்கள் பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்களை உள்ளடக்கியவை. எனவே நீதிமன்றங்கள் உள்கட்டமைப்பு ஒப்பந்த விவகாரங்களில் அதிகம் தலையீடு செய்ய வேண்டாம்’’ என்று கூறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE