தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையையொட்டி, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் இன்று அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ‘யுகாதி ஆஸ்தானம்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உற்சவ மூர்த்தியான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி முன் புத்தாண்டு பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மேலும் மூலவருக்கு புத்தாடை உடுத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதனையொட்டி இன்று கோயிலில் நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு இலவச அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு 31 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 6.4.1985-ல் அன்னதான திட்டத்தை அப்போதைய முதல்வர் என்.டி. ராமாராவ் தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தற்போது தினமும் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்படுவதாக தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago