மும்பை: காஷ்மீரில் வசித்து வந்த பண்டிட்கள் அங்கிருந்து விரட்டப்பட்ட போது தனது சகோதரருக்கு ஏற்பட்ட துயரம் குறித்து பாலிவுட் நடிகர் அனுபம் கேரின் தாயார் விவரித்துள்ளார்.
1990-களில் காஷ்மீரிலிருந்து இந்து பண்டிட்கள் வெளியேற்றப் பட்டதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தை மத்தியில் ஆளும் பாஜக வரவேற்றுள்ளது. அதேநேரம் இந்தத் திரைப்படம் உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா உட்பட பலர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்துள்ள அனுபம் கேரின் தாயார் துலாரி கேர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் காஷ்மீரி பண்டிட். காஷ்மீரில் நீண்ட காலமாக வசித்து வந்தோம். இந்து பண்டிட்கள் பிரச்சினை காஷ்மீரில் ஏற்பட்டபோது நானும், எனது தம்பியும் எங்களுடைய வீட்டை விட்டு தப்பி வந்தோம். காஷ்மீரில் வசித்தபோது ஒரு நாள் எனது தம்பி என்னிடம் வந்து உடனடியாக இங்கிருந்து கிளம்ப வேண்டும். பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது என்றார்.
என் தம்பி அங்கு ராம்பாக் நகரில் வசித்து வந்தான். இந்தப் பிரச்சினை ஏற்படுவதற்கு ஒருஆண்டுக்கு முன்புதான் அங்கு வீடு கட்டியிருந்தான். அப்போது எங்கள் வீட்டுக் கதவில் ஒருஎச்சரிக்கைக் கடிதம் ஒட்டப்பட்டிருந்தது. இன்றைய தினம் உன் முறை. அதாவது உன்னுடைய வீட்டைத் தாக்கப் போகிறோம் என்று அதில் எழுதியிருந்தனர்.
இதனால் அங்கிருந்த பணத்தைக்கூட எடுக்காமல் அங்கிருந்து வந்துவிட்டோம். இந்த நிலைமை எங்கள் எதிரிக்குக் கூட வரக்கூடாது. காஷ்மீர் ஃபைல்ஸ்படத்தை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி சிறப்பாக எடுத் துள்ளார். இதில் எனது தம்பி அனுபம் கேர் அருமையாக நடித் துள்ளார்" என்றார்.
முஸ்லிம் இளைஞருக்கு பாராட்டு
இந்நிலையில், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பார்த்தகாஷ்மீர் முஸ்லிம் இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில், “நான் ஒரு காஷ்மீரி முஸ்லிம். படுகொலைகள் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்கள் வெளியேறியதற்கு கூட்டாக மன்னிப்பு கேட்க வேண்டியதன் அவசியத்தை திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி வலியுறுத்தியுள்ளார். அவரைப் பாராட்டுகிறேன்” என பதிவிட் டுள்ளார்.
இதைப் பார்த்த இயக்குநர் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ளூர் செய்தி சேனலில் அந்த இளைஞரின் பேட்டியைஒளிபரப்பிய வீடியோ பதிவைபகிர்ந்துள்ளார். மேலும் அவர்கூறும்போது, “இனப்படு கொலையை ஒப்புக்கொள்வது மற்றும் சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்பது நீதிக்கான, உரிமைக்கான முதல் படி. இந்த இளைஞரை யாருக்காவது தெரிந்தால், அவருக்கு எனது அன்பையும் நன்றியையும் தெரிவிக்கவும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago