புதுடெல்லி: இரண்டாவது தவணை கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 181 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகள்மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
இந்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு 2 டோஸ்களாக செலுத்தப் படுகின்றன. கோவேக்சின் தடுப்பூசி 28 நாட்கள் கால இடைவெளியிலும், கோவிஷீல்ட் தடுப்பூசி 12 முதல் 16 வார கால இடைவெளியிலும் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்புமருந்தின் நோய் எதிர்ப்பு திறன்அடிப்படையில், 2-வது டோஸ்செலுத்துவதற்கான கால இடைவெளி நிர்ணயிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்துவதற்கான கால இடைவெளி 8 முதல் 16 வாரங்களாக குறைக்கப்படுவதாக நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்டிஏஜிஐ) தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவேக்சின் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தும் கால இடைவெளியில் எந்தமாற்றமும் செய்யப்படவில்லை. உலகளாவிய அறிவியல் சான்றுகளின் அடிப்படையில், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இந்தபரிந்துரையை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago