உக்ரைன் போரில் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் நவீனின் உடல் திங்கட்கிழமை கர்நாடகாவில் உள்ள அவரது சொந்த ஊரை அடைய இருப்பதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியதாக்குதலில் கர்நாடக மாநிலம்தாவணகெரேவை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் நவீன்கடந்த 1-ம் தேதி கொல்லப்பட்டார். ரஷ்ய தாக்குதலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது அவர் உணவு பொருட்கள்வாங்க சென்றார். அப்போதுதாக்குதலில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
அவரது மறைவு குடும்பத் தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நவீனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கினார்.
இந்நிலையில் நவீனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் என அவரது தந்தை சேகரப்பா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுத் தார்.
இதையடுத்து வெளியுறவுத் துறை அதிகாரிகளின் தொடர் முயற்சியின் காரணமாக நவீனின் உடல் நாளை (திங்கட்கிழமை) விமானம் மூலம் பெங்களூரு கொண்டு வரப்படுகிறது. அங் கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தாவணகெகெரேவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கடைசியாக ஒருமுறை
இதுகுறித்து மாணவரின் தந்தை சேகரப்பா கூறுகையில், "எனது மகனின் இழப்பை இன்னும் எங்களால் கடந்துவர முடியவில்லை. கடைசியாக ஒரு முறை அவனது முகத்தை பார்க்க வேண்டும் என ஏங்குகிறோம். திங்கட்கிழமை எங்கள் வீட்டில் இறுதிச் சடங்கு செய்த பிறகு நவீனின் உடலை எஸ்.எஸ். மருத்துவக் கல்லூரிக்கு அளிக்க இருக்கிறோம். என் மகன் எம்பிபிஎஸ் படித்து மருத்துவத் துறையில் சாதிக்க விரும்பினான். இறந்த பிறகும் மருத்துவத் துறைக்கு பயன்படட்டும் என அவனது உடலை தானம் செய்கிறோம்" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago