ஹைதராபாத்: பாஜக நிர்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான நடிகை விஜயசாந்தி சமூக வலைதளம் மூலம் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவை தீவிரமாக விமர்சித்துள்ளார்.
அதில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் பிராணஹிதா புஷ்கரம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தெலங்கானாவில் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். ஆனால், முதல்வர் சந்திரசேகர ராவ் மிகவும் அலட்சியமாக நடந்துகொள்கிறார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 2010-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது பிராணஹிதா புஷ்கரம் சிறப்பாக நடந்தது. அதில் இப்போதைய முதல்வர் சந்திரசேகர ராவ் கூட புனித நீராடினார். இப்போது இவரே முதல்வராக இருந்தும் கூட நடவடிக்கையோ நிதி ஒதுக்கீடோ செய்யவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago