'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் பார்க்க அரசு ஊழியர்களுக்கு அரைநாள் விடுப்பு: அசாம் முதல்வர் சலுகை

By செய்திப்பிரிவு

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் பார்க்க அரசு ஊழியர்களுக்கு அரைநாள் விடுப்பு அளித்துள்ளது அசாம் அரசு. காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற படம் வெள்ளிக்கிழமை வெளியாகியது.

இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.காஷ்மீர் பண்டிட்களின் துயரத்தை கூறும் இப்படத்திற்கு வரி விலக்கு வேண்டி பாஜகவினரால் பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. இப்படத்துக்கு பாஜக ஆளும் ஹரியாணா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தைக் காண அரசு ஊழியர்களுக்கு அரைநாள் விடுப்பு அளித்துள்ளது அசாம் அரசு.

இது தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, "அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் விடுப்பை எடுத்துக் கொண்டு தி காஷ்மீர் ஃப்ளை திரைப்படத்தைப் பார்த்துவரலாம். அடுத்தநாள் டிக்கெட்டை உயரதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தப் படத்தை முதல்வரும் அவரது அமைச்சரவை சகாக்களும் குவஹாத்தி திரையரங்கில் பார்த்து ரசித்தனர்.

பிரதமர் மோடி இப்படம் குறித்து, "தி காஷ்மீர் ஃபைல்ஸ் நல்ல படம். நீங்கள் அனைவரும் அதைப் பார்க்க வேண்டும். இதுபோன்ற திரைப்படங்கள் அதிகம் வர வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்