புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் துணை முதல்வராக தன்னை அமர்த்தும்படி நிஷாத் கட்சியின் தலைவரான சஞ்சய் நிஷாத் வலியுறுத்தி உள்ளார். பாஜகவின் புதிய கூட்டணியான இவரது கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் வென்றுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் கடந்த மார்ச் 10-ல் வெளியானது. இதில், பாஜக கூட்டணி 273 தொகுதிகள் பெற்று உத்தரப் பிரதேசத்தின் தன் ஆட்சியை தொடர உள்ளது. துணை முதல்வராக இருந்த கேசவ் பிரசாத் மவுரியா, சிராத்துவில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதனால், அவரை மீண்டு துணை முதல்வராக்குவதன் மீது கேள்வி எழுந்துள்ளது. அப்பதவிக்கு வேறு தலைவர்களையும் பாஜக அமர்த்தும் வாய்ப்புகள் இருப்பதாகப் பேசப்படுகிறது.
இந்நிலையில், பாஜகவின் கூட்டணிக் கட்சி தலைவர்களும் உ.பி.,யின் துணை முதல்வராகும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதில், அப்னா தளம் (சோனுலால்) தலைவரான மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் மற்றும் நிஷாத் கட்சியின் சஞ்சய் நிஷாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் அப்னா தளம் 17 தொகுதிகளில் போட்டியிட்டு 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நிஷாத் கட்சி போட்டியிட்ட 15 தொகுதிகளில் அதற்கு 11 தொகுதிகள் கிடைத்துள்ளன. இவர்களில் சஞ்சய் நிஷாத் துணை முதல்வர் பதவி பெற அதிக முனைப்பு காட்டுகிறார்.
இது குறித்து நிஷாத் கட்சியின் தலைவரான சஞ்சய் நிஷாத் கூறுகையில், ''இந்தத் தேர்தலில் நாம் பாஜக கூட்டணி வெல்வதற்காக எனக் கடுமையாக உழைத்தோம். குறிப்பாக எங்கள் மீனவர் சமுதாயம் பாஜகவிற்காக தீவிரப் பிரச்சாரம் செய்தது. எனவே, எனது சமூகத்தினர் என்னை உபியின் துணை முதல்வராகப் பார்க்க விரும்புகின்றனர். தேநீர் விற்றவர் நம் நாட்டின் பிரதமராக அமரும்போது, ஒரு மீனவர் ஏன் துணை முதல்வராகக் கூடாது? எங்களை கவுரவப்படுத்தும் வகையில் பாஜக உரியப் பதவியை அளிக்கும் என நம்புகிறேன்.
» தெற்கு ரயில்வேக்கு ரூ.59 கோடி; வடக்கு ரயில்வேக்கு ரூ.13,200 கோடியா? - மக்களவையில் கனிமொழி கேள்வி
» 'காங்கிரஸ் தலைவர் விரும்பியபடி பதவி விலகுகிறேன்' - சித்து ராஜினாமா கடிதம்
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் எங்களுக்கு தேசிய முன்னணி கூட்டணியில் அளிக்கப்பட்ட தேர்தலில் வெல்லும் பொறுப்பை நாம் பூர்த்தி செய்துள்ளோம். உத்தரப் பிரதேசத்தின் மீனவர்கள் நிறைந்த தொகுதிகளாக 160 உள்ளன. பாஜகவை நாம் எங்கள் மூத்த சகோதரராகக் கருதுகிறோம். மற்ற மாநிலங்களிலும் நாம் பாஜகவிற்காக உழைக்கத் தயாராக உள்ளோம். எங்கள் மீனவர் படையால் உத்தரப் பிரதேசத்தில் ராவணன் ஆட்சி அமலாக்க முயன்றவர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர். நாம் வென்ற தொகுதிகளில் எட்டு, கடந்த 2017 இல் பாஜக ஒன்றில் கூட வெல்ல முடியவில்லை'' என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago