ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு கேலிக்குரியது: உமர் அப்துல்லா கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்ற கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை ’கேலிக்குரியது’ என்று என காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில், இது தொடர்பான தீர்ப்பு இன்று நீதிபதிகள் வழங்கினர் அதில் "ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையின்படி அத்தியாவசிய பழக்கம் இல்லை. ஆகையால் கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு என மத அடையாளங்களைத் தாங்கி வர தடை விதித்து பிப்ரவரி 5, 2022-ல் விதிக்கப்பட்ட தடை செல்லும். பள்ளிச் சீருடை என்பது சட்டபூர்வமானதே" என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரசியல் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தத் தீர்ப்பு குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஹிஜாப் என்பது நீங்கள் நினைத்துக் கொண்டிப்பதுபோல் வெறும் ஆடை பற்றியது அல்ல. ஒரு பெண் எப்படி ஆடை அணிய விரும்புகிறாள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் அப்பெண்ணின் உரிமையைப் பற்றியது. இந்த அடிப்படை உரிமையை நீதிமன்றம் நிலைநாட்டவில்லை என்பது கேலிக்குரியது” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்