ஆந்திர மாநிலத்தில் மாவட்ட போக்குவரத்து உதவி ஆணையர் ஏ.மோகன் ரூ.800 கோடி சொத்துகளை குவித்துள்ளது அதிரடி சோதனையில் தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்ட போக்குவரத்துத் துறை உதவி ஆணையரிடமிருந்து ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு அமைப்பினர் இன்று மாவட்ட போக்குவரத்து உதவி ஆணையர் ஏ.மோகன் என்பவரது 9 வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்ட போது கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். சுமார் ரூ.800 கோடி அளவுக்கு அவர் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார்.
மத்திய விசாரணை அமைப்பின் டி.எஸ்.பி.யான ஏ.ரமாதேவி மோகனின் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உள்ள 9 வீடுகளில் வியாழன் மற்றும் வெள்ளியன்று அதிரடி சோதனை மேற்கொண்டார்.
கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் ஏ.மோகன் தனது மூத்த மகள் பெயரில் 8 போலி நிறுவனங்களை நடத்தி வந்ததாகவும் கடும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இன்னும் அவரது வங்கி லாக்கர்கள் பல திறக்கப்படவில்லை, அதனைத் திறக்கும் போது திடுக்கிடும் சொத்துக் குவிப்புகள் தெரியவரலாம் என்று ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கருதுகின்றனர்.
“ஆவணங்களில் உள்ள முகவரிகளைக் கொண்டு இவர் நடத்தும் 8 நிறுவனங்களைத் தடம் காண முடியவில்லை” என்கிறார் டி.எஸ்.பி ரமாதேவி.
முதலில் ஊழல் தடுப்பு அதிகாரிகளை மோகன் தன் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அதிகாரிகளைக் கண்டதும் தனது செல்போனை அவர் தூக்கி விட்டெறிந்துள்ளார். பிறகு அந்த செல்போனையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
விஜயவாடா, அனந்தபூர், கடப்ப, பெல்லாரி, மேடக், நெல்லூர், பிரகாசம் மற்றும் ஹைதராபாத்தில் சில இடங்களிலும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் கடும் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஒரு மாவட்ட போக்குவரத்து உதவி ஆணையர் ரூ.800 கோடி மற்றும் அதற்கும் மேல் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago